Tuesday, January 24, 2012

கனகதாரா ஸ்தோத்திரத்தின் கதை

சுந்தர காண்டம்

ராகம் - ராகமாலிகை

தாளம் - ஆதி

ராகம் - பெஹாக்

சுந்தர காண்ட மென்று பெயர் சொல்லுவார் இதை

சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார்

கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன

கருணை மிகு ராம பக்தன் ஆஞ்சநேயன் பெருமை இது

ராகம் - காம்போதி

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றார் ...........

ராம பாணம் போல் ராக்ஷசர் மனை நோக்கி

ராஜ கம்பீரத்தோடு ராம தூதன் சென்றார்

ராகம் - மாண்டு

அங்கதனும் ஜாம்பவனும் அணைத்து வானரர்களும்

அன்புடன் விடை கொடுத்து வழி அனுப்பினரே

வானவர்கள் தானவர்கள் வருனாதி தேவர்கள்

வழி எல்லாம் கூடி நின்று பூ மாரி பொழிந்தனரே

ராகம் - தன்யாசி

மைநாக பருவதம் மாருதியை உபசரிக்க

மகிழ்வுடன் மாருதியும் மைநாகனை த்ருப்தி செய்து

சுரசையை வெற்றி கண்டு ஸிம்ஹிகையை வதம் செய்து

சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தார்

ராகம் - அடானா

இடக்காக பேசியே இலங்கையின் தேவதையை

இடக்கையால் தண்டித்தவள் இதயத்தை கலக்கினார்

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை

அங்கும் இங்கும் தேடியே அசோகவனத்தை கண்டார்

ராகம் - வசந்தா

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனை த்யானம் செய்யும்

சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்

ராவணன் வெருண்டிட ராக்ஷசியர் அரண்டிட

வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க

ராகம் - கேதார கௌளை

கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி

சூடாமணி பெற்றுக் கொண்டான் சுந்தர ஆஞ்சநேயன்

அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு

அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்

ராகம் - சாவேரி

ப்ரஹ்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயன்

பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க

வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக் கென்றான்

வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்

ராகம் - சஹானா

அரக்கரின் அகந்தையை அழித்திட்ட ஹனுமனும்

அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்று கொண்டான்

ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்

அன்னையை கண்டு விட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்

ராகம் - பாகேஸ்வரி

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்

ஆஞ்சநேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றான்

வைதேகி வாய் மொழியை அடையாளமாகக் கூறி

சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன் சூடாமணியை அளித்தான்

ராகம் - ரஞ்சனி

மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்த ராமன்

மைதிலியை சிறை மீட்க மறு கணம் சித்தமானான்

ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ

ஹனுமனும் இலக்குவனும் உடன் வர புறபட்டான்

ராகம் - சிமேந்திர மத்யமம்

அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை

அன்னை சீதா தேவியை சிறை மீட்டு அடைந்திட்டார்

அயோத்தி சென்று ராமன் அகிலம் புகழ ஆட்சி செய்தார்

அவனை சரணடைந்தோர்க்கு அவன் அருள் என்றும் உண்டு

ராகம் - மத்யமாவதி - விருத்தம்

எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து

மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி கேட்கும்

பரிபூர்ண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உன்னை பணிகிறோம்

பன்முறை உன்னை பணிகிறோம் பன்முறை உன்னை பணிகிறோம்.

 

Listen to this by clicking link below…….