Tuesday, January 31, 2012

வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

betal

வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச்செயல் என்றும்,பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலைபோடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும்.அது அருவெருக்கத்தக்கதாகவும்,அபாயகரமானதாகவும் ஆனது,அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்;(அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்)

அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால்,அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை!!

மருத்துவரைக் கேளுங்கள்: வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்”  என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்) அலோபதி மருத்துவமாகட்டும்;அலோபதி மருத்துவர்களாகட்டும்;இவர்களுக்கு நமது முன்னோர்களையும்,பழங்கால இந்துப் பண்பாட்டையும் குற்றம் சொல்வது வழக்கமான நிலையில்,அத்துடன் அநாவசியமான, லாகிரி வஸ்துக்கள்(போதைப் பொருட்கள்)சேர்த்துச் சாப்பிட்டால் ஏன் சொல்ல மாட்டார்கள்?

வெற்றிலையுடன் சேர்க்கும் பாக்கு,புகையிலை போன்றவற்றால் தான் உடலுக்கு கெடுதல் உண்டாகும் என்று டாக்டர் கமலா க்ருஷ்ணசாமி கூறுகிறார்.இவர் இந்திய ஊட்டச்சத்து சொசைட்டியின் தலைவர்.மேலும் இவர்,வெற்றிலையிலிருந்து கால்சியம்,இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.இது நம்மை குடல் பூச்சிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல; “கர்ப்பப்பை வெப்ப இலைஎன்பது மருவி(பேச்சு வழக்கில் மாறி) கருவேப்பிலை என்று மாறியதுபோல்,இதுவும் வெற்றுஇலை என்று பரப்பப்படுகிறது. ஆனால்,வெற்றிலை பல அரிய மருத்துவகுணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்.சமஸ்க்ருதத்தில் நாகவல்லிஎனப்படும் இது ஆயுர்வேதத்தில் பலவாறாக உபயோகமாகிறது.

மலேஷியாவில் தலைவலி,மூட்டுவலி இவற்றுக்கு வெற்றிலையை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.சீனாவில் இதன் வேரை அரைத்து, உப்பைச் சேர்த்து பல் தேய்க்கிறார்கள்.பல்வலி பறந்து போகிறதாம். பல் தொடர்பான தொல்லைகள் வருவதில்லையாம். இந்தோனேஷியாவில் இருமல்,ஆஸ்த்மா இவற்றை சரி செய்ய வெற்றிலை போடுகிறார்கள்.வெற்றிலையை டீயாகவும் குடிக்கிறார்கள்.வெற்றிலைடீயை குடிப்பதால்,உடல் துர்நாற்றம் போய்விடுகிறதாம்.சிலர் வெற்றிலைச் சாறு எடுத்து, எலுமிச்சம்பழச் சாற்றுடன் சேர்த்து உடலில் சொட்டு தடவிக் கொள்கிறார்கள்.இது ஒரு இயற்கையான ஆண்டி பயோடிக்ஆகும். இது இந்தோனோஷியப் பெண்மணி ஒருவர் வெற்றிலைத் தோட்டத்திற்கு செடி வாங்க வந்த போது பகிர்ந்து கொண்ட தகவல்!!!

கொல்கொத்தா பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் வெற்றிலை செல் டேமேஜ்ஆவதைத் தடுக்கிறது என்று கண்டுபிடித்து ள்ளார்கள். வயது வந்தவர்களுக்கு உடலில் கால்சியம் குறைவதால், பற்கள்,எலும்புகள் வலுவிழக்கின்றன.அவர்களுக்கு கால்சியம் தேவை.அதனால் அவர்கள் வெற்றிலை போடுவது நல்லது. மகளிர்க்கு 50 வது வயதில் ஏற்படும் மாறுதல்களில் நிறைய கால்சியம் விரயமாகிறது.அதை ஈடுசெய்ய இது அரிய வரப்பிரசாதம். மருத்துவர் மாத்திரை எழுதிக்கொடுக்கிறார். ஆனால்,அது வெற்றிலைக்கு ஈடாகாது.அதனால்,அவர்கள் தினம் மூன்று முறை வெற்றிலை போட சிபாரிசு செய்கிறார்கள். இல்லாவிடில் ரத்தத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய எலும்புகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. போன் மினரல் டென்சிடிகுறைந்து எலும்புகள் பலம் குன்றி அநேக பிரச்னைகள்.

இது இருமலுக்கு நல்ல மருந்து. வெற்றிலைச் சாற்றில் வெல்லத்தைப் போட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் இருமல் போய்விடும்.துளசிச்சாற்றையும் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.வெற்றிலைச் சாற்றைப் பிழிந்து அதனால் வாய் கொப்பளித்தால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை போய்விடும்.சீனா, ஜப்பன் போன்ற நாடுகளில் வெற்றிலையை வாயில் போட்டு மென்று விட்டுச் சக்கையைத் துப்பி விடுகிறார்கள். இதனால் வாய்துர்நாற்றமும் போய்விடுகிறது.

இதில் உள்ள செவிகால்என்கிற ரசாயனம் இயற்கையான ஆண்டிசெப்டிக்.அது புண்,தீப்புண்களை ஆற்றுகிறது.வெற்றிலையை அரைத்து,மஞ்சள் கலந்து பற்று போட்டபின்,வெற்றிலையால் மூடி பேண்டேஜ்கட்டிவிட்டால் குணமாகிவிடும்.வெற்றிலைகளை வாட்டி,கடுகு எண்ணெயில் தேய்த்து, படுக்கும் முன் கொப்புளத்தின் மேல் சுற்றி துணியைக் கட்டிவிட்டால் மறுநாள் காலை நீர் வடிந்து குணமாகும்.இதில் உள்ள யூஜினல் சில வகை கொலோன் கேன்சர் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி,கால் தேக்கரண்டி சோம்பு,கசகசா,கொப்பரை,சொட்டு ரோஜா எசன்ஸ்,புதினா ஆகியவை சேர்த்துச் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் ,வேறு மவுத் ஃப்ரஷ்னர்வேண்டாம்.

சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்னைகள் எல்லாம் அகன்றுவிடும். மூளை களைத்துப்போகிறதா? பலவாறான கேள்விகள் உங்களை அயரவைக்கின்றனவா? தலைவலி மண்டையைப் பிளக்கிறதா? வெற்றிலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவுங்கள்.தலைவலியும் போகும்;மனமும் குளிர்ந்துவிடும்; வெற்றிலை போடுவதால் மூளை வலுவாக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சுவையான பந்திச்சாப்பாட்டைக் கழுத்துவரை நிரப்பிவிட்டீர்களா? ஒரு வெற்றிலையை மென்று முழுங்கி விடுங்கள்.சிரமம் குறையும்.அதற்காக அளவுக்கு மீறி உண்ணாதீர்கள்.

குழந்தைக்கு சளியினால் மூச்சுத்திணறல் இருந்தால் கொஞ்சம் சூடான கடுகு எண்ணெயில் வெற்றிலையை நனைத்து குழந்தையின் மார்பின் மேல் போடுங்கள்.கொஞ்ச நேரத்தில் குழந்தை சுலபமாக மூச்சுவிடும்.சிலருக்கு அவ்வப்போது மூக்கில் ரத்தம் வரும்.வெற்றிலையைச் சுருட்டி,மடித்து எண்ணெய் வரும்படி நசுக்கி மூக்கில் வைத்துக் கொண்டால் ரத்தம் வருவது நின்று போகும்.

மலேஷியாவில் ஆர்த்திரைடிசுக்கு வெற்றிலை மூலமே சிகிச்சை செய்கிறார்கள்.கர்ப்பிணிகளுக்கு கால்சியம் அதிகம் தேவைப் படுகிறது. அவர்கள் தினமும் நான்கு அல்லது ஐந்து வெற்றிலைகளைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.மாத்திரைகளை விட பால்,தயிர்,நல்லெண்ணெய்,வெற்றிலை இவற்றிலிருந்து கால்சியத்தை உடல் சுலபமாக ஏற்றுக்கொள்கிறதாம்.

இதில் உள்ள அரிய பல ஊட்டச்சத்துக்களின் காரணமாக இதை பசுமையான தங்கம்என்று அழைக்கிறார் குஹா என்னும் ஆராய்ச்சியாளர்.இதயத்தை வலுப்படுத்துதல்,ரத்த நாளங்களின் வளர்ச்சி,நீரிழிவு கண்ட்ரோல் ஆகிய அபூர்வ குணங்களைக் கொண்ட இந்த மூலிகை வயதானவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.அவர்களுக்கு வெற்றிலைப் பெட்டி அடையாளச் சின்னமாக அவதாரம் எடுத்ததற்கு இதுதான் காரணம்.

இத்தனை உயரிய மருத்துவ குணங்காளைக் கொண்ட இந்த மூலிகை வெற்று இலையா? வெற்றிலையா? ‘கடவுள் ஓர் அற்புதமான மூலிகையைக் கொடுத்தார்;அதற்கு தனது இதயத்தின் உருவத்தையே கொடுத்தார்!!!என்கிறார்கள் வெற்றிலை ஆராய்ச்சியாளர்கள்.

Monday, January 30, 2012

Sri Chakram or Sri Yantra.

The Sri Yantra or Shri Chakra is a yantra formed by nine interlocking triangles that surround and radiate out from the central (bindu) point, the junction point between the physical universe and its unmanifest source. It represents the goddess in her form of Shri Lalitha Or Tripura Sundari, "the beauty of the three worlds". Four of the triangles point upwards, representing Shiva or the Masculine. Five of these triangles point downwards, representing Shakti or the Feminine. Thus the Sri Yantra also represents the union of Masculine and Feminine Divine. Because it is composed of nine triangles, it is known as the Navayoni Chakra.
Together the nine triangles are interlaced in such a way as to form 43 smaller triangles in a web symbolic of the entire cosmos or a womb symbolic of creation. Together they express Advaita or non-duality. This is surrounded by a lotus of eight petals, a lotus of sixteen petals, and an earth square resembling a temple with four doors.
 
ஸ்ரீ சக்கரம் வரைவதை பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

clip_image002
clip_image004
clip_image006
clip_image008
clip_image010

clip_image012
clip_image014
clip_image016
clip_image018
clip_image020
clip_image022
clip_image024
clip_image026
clip_image028