Thursday, January 23, 2014

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!




ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்து புதிய பதிப்பை அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஜாவா வெளியிட்டுள்ளது.

நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது:

1.
உங்கள் கணினியில் Control Panel பகுதிக்கு சென்று Programs and features (windows 7) அல்லது Add or remove programs பகுதிக்கு செல்லுங்கள்.

2.
அங்கு Java 7 Update 10 (அல்லது அதற்கு முந்தைய) பதிப்பாக இருந்தால் அதில்Right Click செய்து Uninstall என்பதை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள்.

3.
பிறகு java.com முகவரிக்கு சென்று ஜாவா புதிய பதிப்பான Java 7 Update 11பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

4.
புதிய பதிப்பை நிறுவிய பின் உங்கள் உலவியை Restart செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! மேலே சொன்னது எளிதாக இருந்தாலும் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். கணினி பயன்படுத்துபவர்கள் உடனடியாக இதனை செய்யவும்.

இதனை பற்றிய சிறிய வீடியோ:
http://youtu.be/TC-4WAXYhqw

No comments: